தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு
சிறுபாக்கம் அருகே தடுப்பணை கட்டுமான பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிறுபாக்கம்,
மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 66 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் சிறுபாக்கம் அடுத்த காஞ்சிராங்குளம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுமான பணிகள் நடக்கிறது. இதை கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுமான பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி, பொறியாளர்கள் சண்முகம், மணிவேல், கார்த்திக், முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story