காவிரி ஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்-மாட்டு வண்டி உரிமையாளர்கள் கோரிக்கை
காவிரி ஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட மாட்டுவண்டி உரிமையாளர்கள் தலைமை சங்க செயற்குழு கூட்டம் பரமத்திவேலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். இதில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கியதையடுத்து, 600-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்களின் குடும்பங்கள் மணல் அள்ளி பயனடைந்தனர். ஆனால் தற்போது மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் மாட்டுவண்டி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாட்டு வண்டி உரிமையாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story