வெப்படை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
வெப்படை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தாலுகா வெப்படை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்படை, பாதரை, இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் நாளை மறுநாள் நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் வாசுதேவன், ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story