தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2022 10:54 PM IST (Updated: 13 March 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

விபத்து அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் ஜங்ஷன் முத்தாரம்மன் கோவில் அருகில் சாலையின் ஓரத்தில் தடுப்பு வேலி சேதமடைந்து சாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
சேதமடைந்த நல்லிகள் மாற்றப்பட்டது
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் நல்லிகள் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், பல நாட்களாக குழாய்களில் இருந்து குடிநீர் வீணாகியது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நல்லிகளை மாற்றி, புதிய நல்லிகள் பொருத்தப்பட்டு சரிசெய்யப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
ஆற்றூர் தோட்டவாரம் பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சரிந்து, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். 
                                      -சுஜித், தோட்டாவாரம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தென்தாமரைகுளத்தில் இருந்து தேரிவிளை செல்லும் சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலை சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                          -செல்வகுமார், தென்தாமரைகுளம்.
பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். அதுபோல இந்த பாதாள சாக்கடை திட்ட பணியால் தாழக்குடி பகுதிக்கு வரும் பஸ்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                      -வேலன், தாழக்குடி.
சேதமடைந்த சாலை
புலியூர்குறிச்சியில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனை செல்லும்  சாலை சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
               -மகேந்திரன்,
 ஓணப்பாறை.

Next Story