அங்காளி காளியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூர் கிராமத்தில் அங்காளி காளியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூர் கிராமத்தில் அங்காளி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 11-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் இருந்து அம்மனை ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றனர். இதில் பக்தர்கள் பலர் அம்மன் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் சூறைாடப்பட்டன. அவ்வாறு சூறையாடப்பட்ட தானியங்களை பக்தர்கள் எடுத்து சாப்பிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோழி, ஆடுகளை பலியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவின் போது அம்மன் வேடம் அணிந்திருப்பவர்கள் பொது மக்களின் மேல் நடந்து சென்றால், அவர்கள் நோயின்றி நீண்ட ஆயுளோடு இருப்பார்கள் என்கிற ஐதீகம் உள்ளது. அதன்படி பொதுமக்கள் பலர் தரையில் படுக்க, அவர்கள் மீது அம்மன் வேடம் அணிந்திருந்தவர்கள் ஏறி நடந்து சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஷில்பா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story