மருத்துவ மாணவர்கள் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்


மருத்துவ மாணவர்கள் கல்விக்கடனை  ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2022 11:59 PM IST (Updated: 13 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ மாணவர்கள் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி அளித்தார்.

காரைக்குடி, 
தேவகோட்டை-திருப்பத்தூர் சாலை அருகில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்தில் நடத்துவதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது. ரஷியா-உக்ரைன் போரால் தமிழகத்தில் இருந்து மருத்துவம் படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் சென்றிருந்த நிலையில் போர் நடந்து வருவதால் அங்கு மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலையில் தாயகம் திரும்பிய மாணவர்கள் கல்வி கடன் பெற்றிருந்தால் அந்த கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர்வது இயலாதது. மேல்படிப்புக்கு இந்திய ராஜாங்க உறவு வைத்து இருக்கும் நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி மேற்படிப்பை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் படிப்பு செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். வடமாநிலங்களில் பி.ஜே.பிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து தேர்தலுக்கு தயார் படுத்திக்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, தேவகோட்டை காங்கிரஸ் கட்சி வடக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், அப்பச்சி சபாபதி, தி.மு.க. மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் ரூசோ, தி.மு.க. நகர் செயலாளர் பாலா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story