தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 March 2022 12:04 AM IST (Updated: 14 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நொய்யல், 
கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அணியார் காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பகவதி தங்கம் (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 
இந்தநிலையில் அங்குள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து செல்வதற்காக பிரபு உள்ளிட்ட சிலர் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
ஆற்றில் மூழ்கி பலி
இதனைதொடர்ந்து, அவர்கள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில், அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பிரபுவை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
கோவில் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story