தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு
தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு 4-வது முறையாக தர மதிப்பீடு ஆய்வுகள் நடத்தியது. ஆய்வில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி 4-ம் முறை மதிப்பீட்டுக்கு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வுக்குழுவினர் கல்லூரியில் அனைத்து துறைகளிலும் ஆய்வுகள் மேற் கொண்டனர். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள், பெற்றோர், கல்லூரி முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கல்லூரியின் ஆட்சி குழு உறுப்பினர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் ஆய்வு அறிக்கை கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டது. கல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கும் மாணவி அபி வரைந்த ஓவியம் ஆய்வுக்குழுவினரிடம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அகமது கான் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story