தேனி மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
தேனி மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ராமநாதபுரம்,
தேனி மாவட்டம் சின்னமனூர் ஹைவேவிஸ் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பழனிக்குமார் (வயது 52). இவர் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பேரணி பாதுகாப்பிற்காக நேற்று ராமநாதபுரம் வந்திருந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவர் பணி முடிந்து ராமநாதபுரத்தில் இருந்து தேனி செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு காத்திருந்த போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இவரின் உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அங்கு நேரில் சென்று விசாரித்தார்.
Related Tags :
Next Story