மானைக்கால் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மானைக்கால் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 14 March 2022 12:25 AM IST (Updated: 14 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி மானைக்கால் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி மானைக்கால் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானைக்கால் மகாமாரியம்மன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புகழ்பெற்ற மானைக்கால் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 64-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புகட்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமி வீதியுலா காட்சியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. 
பக்தர்கள் தீக்குழியில் இறங்கி...
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. திருக்குறள் கரையில் இருந்து காவடி, பால்குடம், அலகு காவடி என திரளான பக்தர்கள் எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். 
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவேலு மற்றும் கணக்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்தல், அர்ச்சனை செய்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Next Story