உலக மகளிர் தின விழா கருத்தரங்கம்


உலக மகளிர் தின விழா கருத்தரங்கம்
x
தினத்தந்தி 14 March 2022 12:33 AM IST (Updated: 14 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

கரூர், 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் கரூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பிரவீனா வரவேற்றார். கருத்தரங்கில் கரூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அக்கமிட்டி மாதத்திற்கு ஒருமுறை கூடி ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும். கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களுக்கு பெண்கள் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகம் அரசால் நடத்தப்பட வேண்டும். மகளிருக்கென பஸ் காலையிலும், மாலையிலும் ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story