அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி குமார கோவில் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது 57). இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கம் காரணமாகவும், கடன் பிரச்சினை காரணமாகவும் கடந்த 2 நாட்களுக்கு பிரம்மநாயகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரம்மநாயகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story