தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி எஸ்.ராமலிங்கபுரம் சாலையின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாய் நிறைந்து கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் ெதாற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சிவராமன், மேலராஜகுலராமன்.
தூர்வாரப்படாத கால்வாய்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி வாா்டு எண்-29 வீரையன் கண்மாய் கால்வாய் பல நாள்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு ெகாசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைமணி, காைரக்குடி.
பஸ் வசதி தேவை
மதுரை மாவட்டம் ேசடப்பட்டி யூனியன் காளப்பன்பட்டி, பெருங்காமநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் வெளியூரில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மாலை நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் ெபாிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் சேடப்பட்டி வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காசிமாயன், காளப்பன்பட்டி.
செயல்படாத நீர்தேக்க தொட்டி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சம் தவிர்த்தான் ஊராட்சி அக்ரகாரம் தெருவில் உள்ள ஆழ்துளை நீர்தேக்க தொட்டி பல நாட்களாக ெசயல்படாமல் உள்ளது. தற்போது வெயில் காலமாக இருப்பதால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை நீர் ேதக்க ெதாட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
பாலா, ஸ்ரீவில்லிபுத்தூர்.
Related Tags :
Next Story