ஆந்திராவில் நெல்லைக்கு 3,625 டன் ரேஷன் அரிசி வருகை
ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 3,625 டன் ரேஷன் அரிசி வந்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில தொகுப்புகளில் இருந்து அரிசி வழங்கப்படுகிறது.
மத்திய தொகுப்பில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் மாதந்தோறும் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 58 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 3 ஆயிரத்து 625 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ரெயில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய சரக்கு இறங்கு தளத்துக்கு வந்து சேர்ந்தது. ரெயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அவை அரசு குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story