வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
திருவட்டார் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவட்டார் அருகே உள்ள கண்ணனூர் பருத்தி பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமாரி. (வயது 49). இவருடைய மகன் அனீஷ் (28). இவர் வீட்டில் டயருக்கு ரீபட்டன் அடித்து தரும் தொழில் செய்வது தொடர்பாக, அதே பகுதியை ்சேர்ந்த மணி (50) என்பவருடன் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அனீஷ் வீட்டுக்குள் புகுந்த மணி, அவருடைய மருமகன்கள் சசி (39) செல்வின், சசியின் மனைவி அன்னாள் (39) மற்றும் வசந்தா (60) ஆகியோர் சேர்ந்து வெட்டு கத்தியால் அனீஷை வெட்டியதாகவும், கம்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து மணியையும், சசியையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story