சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
மதுரை,
மதுரையை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2019-ல் ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை செய்தபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, தனது அதிகார வரம்புக்கு வெளியே உள்ள நிலம் உள்பட பல்வேறு சொத்துக்களை கோவில் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தனியாருக்கு ஆதரவாக பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சார் பதிவாளர் பாலமுருகன் கோவில் சொத்துக்களை தனியாருக்கு பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது.
இதனால் இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தற்போது அவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் பாலமுருகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story