சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 1:17 AM IST (Updated: 14 March 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்

புதூர்,
மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷலு (வயது 65). இவர் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயாரிடம் கூறினார். அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷலுைவ கைது செய்தனர். இவர் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story