ராஜகோபுரத்தில் திருப்பணிகள் தொடக்கம்
கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் தொடங்கியது.
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் திருப்பணிகள் தொடங்கியது.
ராஜகோபுரம்
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியில் உள்ளது. இங்கு திருப்பணி மராமத்து பணிகள் 10 வருடங்களுக்கு பிறகு நேற்று காலையில் தொடங்கியது. இதையொட்டி முதற்கட்ட பணியாக கோவில் உள் பகுதியில் உள்ள யாகசாலையில் பல்வேறு பூஜைகளும், அக்னி ஆராதனமும், மஹாபூர்ணாகுதி, யாத்ரா தானம் போன்ற பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து நூபுர கங்கை புனித தீர்த்த குடத்துடன் வர்ண குடையோடு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரத்துடன், கோவில் யானை கல்யாண சுந்தரவல்லி தாயார் முன்னே செல்ல அம்பி சுந்தரநாராயணன் பட்டர் தீர்த்த கும்பத்தை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்றார்.
பூஜை
18-ம் படி கருப்பணசாமி 7 நிலை கொண்ட ராஜகோபுரம் முன்பாக மராமத்து பணி தொடக்கத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா மங்கள இசையோடு, நூபுர கங்கை தீர்த்த அபிஷேகத்துடன் பட்டர்கள் வேத மந்திரங்களுடன், தீபாராதனையுடன் நடைபெற்றது. கோவில் தக்கார் வெங்கடாசலம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை ஆணையர் அனிதா முன்னிலை வகித்தார்.
முன்னதாக பூஜை நிகழ்வுகள் அனைத்தும் அர்த்த மண்டபத்தில் நடைபெற்றதால் பூஜை முடிந்ததும் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட் டனர். இந்த விழாவின் போது கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த ராஜகோபுர திருப்பணிகள் சுமார் ரூ. 95 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story