ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது


ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 14 March 2022 1:32 AM IST (Updated: 14 March 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாத்தூர், 
சாத்தூர் அருகே ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஏ.டி.எம்.மில் தீப்பிடித்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கி ஒன்று ஏ.டி.எம். உள்ளது. 
இந்த நிலையில் நேற்று மின்கசிவு காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீ மேலும் பரவாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
எரிந்து நாசம்
இருப்பினும் ஏ.டி.எம். எந்திரம், அதில் இருந்த பணம் மற்றும் அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன எந்திரம் உள்பட அனைத்துக் பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. மேலும் தீ விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த தீ விபத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் எரிந்து நாசமாகி இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் வங்கி அதிகாரிகள், போலீசார் விசாரணைக்கு பிறகு தான் எவ்வளவு பணம் எரிந்து நாசமானது என்ற தகவல் முழுமையாக தெரியவரும்.

Related Tags :
Next Story