சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை


சீனிவாச பெருமாள் கோவிலில்  கல்கருட சேவை
x
தினத்தந்தி 14 March 2022 1:42 AM IST (Updated: 14 March 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர்:
நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சீனிவாச பெருமாள் கோவில் 
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.  உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு மூலவராகவும், உற்சவராகவும்  கருடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கல்கருட சேவையும், இரவு வீதி உலாவும் நடைபெறுவது சிறப்பு. 
கல்கருட சேவை 
இக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10-ந்தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு புஷ்ப அலங்காரத்தில்  சீனிவாச பெருமாள் வீதி உலா காலை, மாலை இருவேளைகளிலும் நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று மாலை கல்கருட சேவை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 18-ந்தேதி பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story