வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது


வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 1:47 AM IST (Updated: 14 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்

நாகமலைபுதுக்கோட்டை, 
நாகமலைபுதுக்கோட்டை அடுத்துள்ள வடபழஞ்சி முத்துப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகன் மணிகண்டன் (வயது 25). கொத்தனார். இவர் தனது தம்பியுடன் மோட்டார்சைக்கிளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஐ.டி. பார்க் அருகில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அதே ஊரை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் விஜய் (வயது 22) என்பவர் இவர்களை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, மணிகண்டன் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

Related Tags :
Next Story