மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
திருப்பனந்தாள் அருகே மதுவில் விஷம் கலந்துகுடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் அருகே மதுவில் விஷம் கலந்துகுடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து சாவு
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சின்ன கட்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விஜய் (வயது25). இவர் காரைக்காலில் உள்ள தனது தாய் ஊரில் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்காலில் இருந்து திருப்பனந்தாளில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு விஜய் வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு சின்னகட்டாநகரம் நாரை வாய்க்கால் அருகே விஜய் அமர்ந்து இருந்தார். அப்போது எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ஒரு கடிதத்தை எழுதி வைத்தார். பின்னர் மதுவில் விஷத்தை கலந்து குடித்துவிட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விசாரணை
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story