வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது


வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 1:59 AM IST (Updated: 14 March 2022 1:59 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மாகாலனி அய்யனார் தெருவை சேர்ந்தவர் உசேன்(வயது 22). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த விஜய் ஆண்டனி(21). இவர்கள் இருவரும் நேற்று உசேனின் மொபட்டில் கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (36) மற்றும் சந்திரசேகர்(30), ரஞ்சித் (28) ஆகிய மூவரும் மதுபோதையில் உசேன் மற்றும் விஜய் ஆண்டனியிடம் தகராறு செய்தனர். அப்போது ரஞ்சித் கட்டையால் விஜய் ஆண்டனியின் தலை மற்றும் கை, கால்களில் தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசில் உசேன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story