காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு
தஞ்சையில் காமாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை எதிரில் சரபோஜி நகரில் அமைந்து உள்ளது காமாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் புதிதாக லட்சுமி குபேரர் சன்னதியும், தன்வந்திரி பகவான் சன்னதியும், சமயக்குரவர் நால்வர் சன்னதியும் கட்டப்பட்டு புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு காமாட்சி அம்மன், விநாயகர், பாலசுப்பிரமணியர், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், விஷ்ணு துர்க்கை, அய்யப்பன், பைரவர், நவக்கிரகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களுக்கும், காமாட்சி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதில் விழா கமிட்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story