வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்ததால் ஈரோட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி; கிலோ ரூ.20-க்கு விற்பனை


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்ததால் ஈரோட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி; கிலோ ரூ.20-க்கு விற்பனை
x
தினத்தந்தி 14 March 2022 2:29 AM IST (Updated: 14 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி குறைந்ததால், ஈரோட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

ஈரோடு
வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி குறைந்ததால், ஈரோட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.
விலை குறைவு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது. இதேபோல் வெங்காயத்தின் விலையும் மிகவும் குறைந்து உள்ளது.
விடுமுறை நாட்களில் காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை அதிகமாக காணப்படும். நேற்று காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளதால், பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றார்கள். இதனால் காய்கறிகளின் விற்பனையும் அமோகமாக இருந்தது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
வெளிநாடுகளுக்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது உக்ரைன் போர் எதிரொலியாக ஏற்றுமதி குறைந்து உள்ளது. இதனால் உள்ளூரில் தேவைக்கு அதிகமாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கிடைக்கிறது. வரத்து அதிகமாக இருப்பதால், விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இதேபோல் முருங்கைக்காய் வரத்து அதிகரித்து வருவதால் அதன் விலையும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ கத்திரிக்காய் - ரூ.40-க்கும், வெண்டைக்காய் - ரூ.30-க்கும், பீட்ரூட் - ரூ.50-க்கும், பாகற்காய் - ரூ.35-க்கும், புடலங்காய் - ரூ.20-க்கும், அவரைக்காய் - ரூ.30-க்கும், பச்சை மிளகாய் - ரூ.70-க்கும், சேனைக்கிழங்கு - ரூ.20-க்கும், முட்டைக்கோஸ் - ரூ.25-க்கும், கேரட் - ரூ.90-க்கும், பீன்ஸ் - ரூ.50-க்கும், இஞ்சி - ரூ.50-க்கும், பட்டாணி - ரூ.80-க்கும், குடைமிளகாய் - ரூ.80-க்கும், தக்காளி - ரூ.8-க்கும் விற்பனையானது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story