வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி 5-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் உதய கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று காலை தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு கோவிலில் நடக்கிறது.
Related Tags :
Next Story