கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-பசவராஜ் பொம்மை


கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 14 March 2022 2:57 AM IST (Updated: 14 March 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பசவராஜ் பொம்மை உறுதி

பெங்களூரு:
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளான பிரகலாத் ஜோஷி, ஷோபா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவிக்கு கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை வெற்றியாகும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு இடையே இருந்த ஒற்றுமையே காரணமாகும். பா.ஜனதா கட்சியினர் 24 மணிநேரமும் வெற்றிக்காக உழைத்தனர். இந்த வெற்றியின் மூலம் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. 
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story