மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு; கலெக்டர் தகவல்


மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 March 2022 2:59 AM IST (Updated: 14 March 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
மகளிர்திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்து அரசுத்துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனை கண்காட்சியில் இடம் பெறலாம். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை அண்ணா தெரசா மகளிா் வளாகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கோவை கொண்டாட்டம் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
இதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை ஈரோடு பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகம் முதல் தளத்தில் உள்ள திட்ட செயலாக்க அலகு தமிழ் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94440 94276 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story