தாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன் கைது
தாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
வெட்டிக்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மனைவி சரஸ்வதி(வயது 71). இவர்களது மகன் ரவிச்சந்திரனுக்கும்(45). இவருக்கும், சரஸ்வதிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ரவிச்சந்திரனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சரஸ்வதியை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழூவூர் போலீசார், சரஸ்வதியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story