கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் சந்திக்க தயார்-எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா


கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் சந்திக்க தயார்-எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா
x
தினத்தந்தி 14 March 2022 3:03 AM IST (Updated: 14 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பா.ஜனதா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மண்டியா மாவட்டம் மத்தூரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
எனது அரசியல் அனுபவத்தின்படி கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா தெரிவித்துள்ளனர். 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் முன்பாக எதற்காக பா.ஜனதாவினர் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதமே கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று நினைக்கிறேன். ஒருவேலை முன்கூட்டியே சட்டசபைக்கு தேர்தல் நடந்தால், அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட மாட்டேன். ஏற்கனவே பாதாமி உள்ளிட்ட பல தொகுதிகளில் என்னை போட்டியிடுமாறு அழைப்புகள் வருகிறது.

 எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இதுபற்றி கூடிய விரைவில் அறிவிப்பேன். சி.எம்.இப்ராகிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குறித்த ராஜினாமா கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story