அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2022 3:06 AM IST (Updated: 14 March 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

பீதர்:
பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகா குமார சிஞ்சோலி கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார். இவர் வடகர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். உம்னாபாத், பீதர் உள்பட 10 போக்குவரத்து கழக பணிமனையில் அவர் டிரைவராக பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தொடர்பான ஒரு சான்றிதழ் கேட்டு ஓம்கார் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அந்த சான்றிதழை அவருக்கு வழங்காமல் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஓம்கார் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் உம்னாபாத் எம்.எல்.ஏ. ராஜசேகர் பட்டீல் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Next Story