சேலத்தில் அனுமதியின்றி ரத யாத்திரை நடத்த முயற்சி-17 பேர் கைது


சேலத்தில் அனுமதியின்றி ரத யாத்திரை நடத்த முயற்சி-17 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 3:06 AM IST (Updated: 14 March 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அனுமதியின்றி ராமர் ரத யாத்திரை நடத்த முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் அனுமதியின்றி ராமர் ரத யாத்திரை நடத்த முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரத யாத்திரை
சேலத்தில் ராஷ்டிரிய இந்து மகாசபா அமைப்பு சார்பில் நேற்று காலை ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் ராமர் ரத யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த ரத யாத்திரைக்கு மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று காலை 9 மணிக்கு ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகில் அந்த அமைப்பின் மாநில தலைவர் வேலுச்சாமி, துணைத்தலைவர் முனியப்பன் உள்பட சிலர் ராமர் ரதத்துடன் வந்தனர். அவர்கள் ரத யாத்திரையை தொடங்க முயன்றனர்.
17 பேர் கைது
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், ரத யாத்திரையை நடத்த அனுமதி இல்லை என்றும், தடையை மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறினர்.
அப்படி இருந்தும் தடையை மீறி ரத யாத்திரை நடத்த முயன்றதால் ராஷ்டிரிய இந்து மகாசபா அமைப்பு மாநில தலைவர் வேலுச்சாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Next Story