கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள தடுப்பணையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிப்பதற்காக கோபி, சத்தியமங்கலம், பவானி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். பின்னர் இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் அருவி தண்ணீரில் குளித்து மகிழ்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை அங்குள்ள பூங்காவில் பகிர்ந்து உண்பார்கள். எனவே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். எனினும் தடுப்பணை அருவியில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டியதால், அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story