டி.என்.பாளையம் அருகே ஏளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


டி.என்.பாளையம் அருகே ஏளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 March 2022 3:39 AM IST (Updated: 14 March 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே ஏளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே ஏளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் அறுவடை பணி
டி.என்.பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இது தற்போது நன்கு விளைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு அறுவடையின் போதும், முன்னதாகவே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. கோபி அருகே உள்ள ஏளூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் கடந்த வாரம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கொள்முதல் நிலையம்
அதைத்தொடர்ந்து ஏளூர், இந்திராநகர், நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலில் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட உள்ள இடத்தில் கொட்டி வைத்து உள்ளனர். ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை.   இது குறித்து விவசாயிகள் கூறும்போது,‘ கடந்த 5 நாட்களாக நாங்கள் அறுவடை செய்த நெல்லை ஏளூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் கொட்டி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை திறக்காததால் இரவு நேரங்களில் அங்கேயே நாங்கள் நெல்லுக்கு காவல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. உடனே நெல் கொள்முதல் மையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதிகாரிகள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதால்,  அதற்கேற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  உடனடியாக நெல்கொள்முதல் மையம் திறக்கப்படும்’ என்றனர்.

Next Story