ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம்; மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தகவல்


ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம்; மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தகவல்
x
தினத்தந்தி 14 March 2022 3:50 AM IST (Updated: 14 March 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதன்படி முதல் முகாம் வருகிற 15-ந் தேதி (அதாவது நாளை செவ்வாய்க்கிழமை) காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் நடக்கிறது.
2-வது முகாம் 18-ந் தேதி ரெயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாம்களில் 30 வகையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமுக்கு வரும் பொதுமக்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை நகல் என ஏதேனும் ஒன்று எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆணையாளர் சிவக்குமார் கூறி உள்ளார்.

Next Story