மொபட்டுகளில் கொண்டு வரப்பட்ட 130 மதுபாட்டில்கள் பறிமுதல்


மொபட்டுகளில் கொண்டு வரப்பட்ட 130 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2022 4:04 AM IST (Updated: 14 March 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

மொபட்டுகளில் கொண்டு வரப்பட்ட 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், கோடாலி டாஸ்மாக் மதுபான கடை அருகில் உள்ள பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதி வழியாக கழுவந்தொண்டி கீழத்தெருவில் வசிக்கும் ஜெயராமன்(வயது 52) என்பவர் வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தார். இதில் அந்த மொபட்டில் 90 மதுபாட்டில்கள் இருந்ததும், அவற்றை பதுக்கி வைத்து விற்க அவர் வாங்கிச் சென்றதும்  தெரியவந்தது. இதையடுத்து ஜெயராமனை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் கைது செய்து அவரிடம் இருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கோடாலி மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதி வழியாக உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த சுதாகர்(40) ஓட்டி வந்த மொபட்டை நிறுத்தி சோதனையிட்டார். இதில் அந்த மொபட்டில் 40 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுதாகரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Next Story