மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சதுரங்கம் கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 11, 14, 17 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 4 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட சதுரங்கம் கழகத்தின் தலைவர் சரவணன், செயலாளர் அலெக்ஸ்சாண்டர், பொருளாளர் அழகுதுரை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story