சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்; 16 பேர் மீது வழக்கு


சாத்தான்குளம் அருகே கோஷ்டி மோதல்; 16 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 March 2022 5:08 PM IST (Updated: 14 March 2022 5:08 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடல் ஆர்சி.சர்ச்தெருவை சேர்ந்த தோமாஸ் மனைவி வின்னில்அரசி சுமதி (வயது 31). இவரது குடும்பத்திற்கும், அதேபகுதியை சேர்ந்த யாகோபு மகன் ஜேம்ஸ் (60) என்பவரது குடும்பத்திற்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்தசம்பவத்தில் வின்னில்அரசிசுமதி, அவரது சகோதரி சுகன்யா, ்எதிர்தரப்பில் ஜேம்ஸ் ஆகிய  3 பேரும் காயம்அடைந்தனர். இவர்கள்சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த மோதல் தொடர்பாகஇருதரப்பினரும் தனித்தனியாக சாத்தான்குளம் போலீசில்புகார்அளித்தனர். இதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன இருதரப்பைசேர்ந்த 16 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார். இதில் ஜேம்ஸ்மகன்டேனி (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Next Story