மருத்துவ சிகிச்சை முடிந்து வந்த மகள் கைது
ராமநாதபுரம் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து தந்தையை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் சிகிச்சையில் இருந்து வந்த மகள் நேற்று கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து தந்தையை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் சிகிச்சையில் இருந்து வந்த மகள் நேற்று கைது செய்யப்பட்டார்.
லாரி டிரைவர்
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரி மடத்தை சேர்ந்தவர் ரவி (வயது53). லாரி டிரைவரான இவரை மனைவி பாக்கியம், மகள் பவித்ரா, மகளின் கள்ளக்காதலன் முருகா னந்தம் ஆகியோர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்தனர்.
பவித்ராவின் கள்ளக்காதலையும், அதற்கு துணைபோகும் மனைவியையும் ரவி கண்டித்ததால் ஆத்திரமடைந்து கூட்டு சதி செய்து இந்த கொலையை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராம நாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியம் (51), பவித்ராவின் கள்ளக்காதலன் முருகானந்தம் (42) ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பவித்ரா சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று பவித்ராவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துவேறுபாடு
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பவித்ரா தாய் பாக்கியத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றபோது லோடு ஏற்ற வந்த முருகானந்தத்துடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்து தந்தை ரவி கண்டித்ததாலயே தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து ரவியை எரித்து கொலை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் முதலில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்து மவுனம் சாதித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களின் விசாரணையை வேறு கோணத்தில் தொடங்கியபோது அந்த ஊரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான். பவித்ரா கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து சென்றதாகவும் இடையவர்வலசை பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒருவர் வந்து பாட்டிலில் பெட்ரோல் கொடுத்ததாகவும் அதனை பவித்ரா வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதுகுறித்து விசாரித்தபோது பவித்ராவிடம் பெட்ரோல் வாங்கி கொடுத்து அனுப்பியது முருகானந்தம் என்பதை கண்டறிந்தனர். இதன் பின்னர் நடந்த விசாரணையின் அடிப்படையில்தான் 3 பேரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
Related Tags :
Next Story