ஓய்வுபெற்ற கலால் துறை இன்ஸ்பெக்டரிடம் ரூ.7 லட்சம் மோசடி
அந்தேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற கலால் துறை இன்ஸ்பெக்டரிடம் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
அந்தேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற கலால் துறை இன்ஸ்பெக்டரிடம் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரி
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் 72 வயதான ஓய்வு பெற்ற கலால் துறை இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் புதிய ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்து வாங்கினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.10 ஆயிரம் பெற முடியும் என அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதைப்பார்த்த ஓய்வு பெற்ற அதிகாரி குறுந்தகவலில் இருந்த எண்ணிக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி அதில் அதிகாரியின் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட சொன்னார்.
ரூ.7 லட்சம் மோசடி
அதிகாரியும் 10 ஆயிரம் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் எதிர்முனையில் சொல்லியதை எல்லாம் செய்தார். மேலும் அவருக்கு வந்த ஒ.டி.பி.களையும் கூறினார். இந்தநிலையில் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்த ரூ.7 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அதிகாரி சம்பவம் குறித்து டி.என். நகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஓய்வு பெற்ற கலால் துறை அதிகாரியிடம் மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story