சாலையோரத்தில் கிடந்த 18 மூட்டை ரேஷன் அரிசி மீட்பு
கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் கிடந்த 18 மூட்டை ரேஷன் அரிசியை மீட்டு அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா வினியோக அதிகாரி தகவல் கிடைத்தது. இதன் பேரில் தாலுகா வினியோக அதிகாரி நாகராஜன், வருவாய் ஆய்வாளர் கடல்குமார் ஆகியோர் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள மேலத் தெரு, மெயின் ரோடு பகுதியில் அனாதையாக கிடந்த 18 மூட்டை ரேஷன் அரிசியை (934 கிலோ) அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த மூட்டைகளை வேனில் ஏற்றி கோவில்பட்டி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தது யார்? சாலையோரத்தில் வீசப்பட்டது ஏன்? என்பது குறித்து தாலுகா வினியோக அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story