போலீஸ் நிலையம் வருபவர்களை விருந்தினர் போல நடத்த வேண்டும்- போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை
போலீஸ் நிலையம் வருபவர்களை விருந்தினர் போல நடத்த வேண்டும் என போலீசாருக்கு கமிஷனர் சஞ்சய் பாண்டே கூறியுள்ளார்.
மும்பை,
போலீஸ் நிலையம் வருபவர்களை விருந்தினர் போல நடத்த வேண்டும் என போலீசாருக்கு கமிஷனர் சஞ்சய் பாண்டே கூறியுள்ளார்.
விருந்தினர்
மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே பொதுமக்கள் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு போலீஸ் நிலையம் வர தேவையில்லை என சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் அவர் பேஸ்புக் லைவ்வில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் பொதுமக்களிடம் சரியாக நடந்து கொள்ளாமல், கடினமாக பேசினால் அது நமது பெயரை களங்கப்படுத்தும். முதியவர்கள் போலீஸ் நிலையம் வந்தால், முதலில் நாம் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும். போலீஸ் நிலையம் வரும் நபர்களை நாம் விருந்தினர் போல நடத்த வேண்டும். பணக்காரரோ, ஏழையோ எல்லா புகார்களையும் சமமாக கருத வேண்டும். பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் நன்றாக நடத்தப்பட வேண்டும்.
நடவடிக்கை
நமது அதிகாரிகள் சட்டவிரோத லாட்டரி, டான்ஸ் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அது அவர்களின் பெயரை கெடுப்பதாக இருக்க கூடாது. இதேபோல தாறுமாறாக வண்டி ஓட்டிச்செல்லும் உணவு டெலிவிரி பாய்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story