ஜோலார்பேட்டையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜோலார்பேட்டையில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் பொதுச்செயலாளர் எஸ். கண்ணையா அறிவுறுத்தலின்பேரில் யூனியன் தொழிலாளர்கள் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ. ஜோலார்பேட்டை கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
இதில் ெரயில்வே யூனியன் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ரெயில்வே நிர்வாகத்தில் ரெயில்வே தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களை நிலுவையின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் எனக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story