பெண்கள் பயணிக்க கட்டணமில்லா பஸ் வசதி
கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று பெண்கள் பயணிக்க கட்டணமில்லா பஸ் வசதிக்கு முதல்-அமைச்சர், அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் முதலியார் புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவரை, முதலியார் புதுக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாயல்குடியில் இருந்து கமுதி செல்லும் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பஸ்சை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களின் நலன் கருதி இயக்க வேண்டும் என எம். புதுக்குளம் ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் ஊராட்சி சார்பில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அவசர மனு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பஸ் வசதி செய்ய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரிந்து ரையின் பேரில் அக்கிராம மக்களின் கோரிக்கை மனுவை ஏற்று 2 நாட்களில் முதலியார் புதுக்குளம் திருவரை கிராமங் களுக்கு கமுதி போக்குவரத்து கிளையில் இருந்து பெண்கள் பயணம் செய்ய கட்டணமில்லா அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்சை திருவரை, முதலியார் புதுக்குளம் கிராமம் வரை புதிய வழித்தடத்தில் சென்று வர ஏற்பாடு செய்யப் பட்டது. இதனையடுத்து புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு ஊராட்சி தலைவர் முருகன் தலைமையில் பொதுமக்கள், டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி பட்டாசு வெடித்து மாலை அணிவித்து மலர் தூவி குலவை யிட்டு ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பளித்தனர். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி கடிதம் அனுப்பினர்.
Related Tags :
Next Story