21 மாணவர்களும் திருவண்ணாமலை திரும்பினர்
உக்ரைனில் சிக்கிய 21 மாணவர்களும் திருவண்ணாமலை திரும்பினர்
திருவண்ணாமலை
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நிலவுவதால் அங்கு இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிக்கி இருந்தனர்.
அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் அங்கு சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கவும் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கட்டங்களாக தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்களும் அங்கு படித்து வந்ததும் அங்கு சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.
அவர்களையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 21 மாணவ- மாணவிகள் பல கட்டமாக அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பத்திரமாக திருவண்ணாமலை திரும்பினர்.
இந்த தகவலை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story