போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 March 2022 6:20 PM IST (Updated: 14 March 2022 6:20 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொண்டி, 
திருவாடானை உட்கோட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வருபவர் சித்தன். சம்பவ தினத்தன்று இவரது தலைமையில் தொண்டி போலீஸ் நிலைய ஏட்டு கணேசன், ஆயுதப்படை காவலர் கதிரேசன் ஆகியோர் தொண்டி பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனராம். அப்போது போலீசார் புது வயல் கிராம பகுதியில் நின்று கொண்டிருந்தபோது பழங் குளம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவரை போலீசார் வழிமறித்து உள்ளனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டாராம். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் நபராக இருக்கும் என சந்தேகப்பட்ட போலீசார் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அப்போது அங்கு வந்த சிலர் சப்-இன்ஸ்பெக்டர் சித்தனை தரக்குறைவாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தொண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் பழங்குளம் பிரபாகரன் (வயது 34), எட்டுகுடி ராஜசேகர்  (36), பழங்குளம் பால்ராஜ் (65) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story