திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 2,270 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது


திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 2,270 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 14 March 2022 6:58 PM IST (Updated: 14 March 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 2,270 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ல் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் இதுவரை 3,299 பயனாளிகளுக்கு அடையாள அட்டை, 2,270 பயனாளிகளுக்கு ரூ.2.54 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதயநோய், கண் சிகிச்சை, புற்றுநோய், நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மற்றும் 75 முழுமையான நோய் பரிசோதனை முறைகள், 154 தொடர் சிகிச்சைகள், 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 4 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 3 நோய் கண்டறியும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் முதல்-அமைச்சாரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை அணுகி பொது மக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story