ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம். அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு


ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம். அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 14 March 2022 7:18 PM IST (Updated: 14 March 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்தினறாளிக்கு அமைச்சர் காந்தி செல்போன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்தினறாளிக்கு அமைச்சர் காந்தி செல்போன் வழங்கினார்.

அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
காதுகேளாத மற்றும் கண்பார்வை பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான செல்போனை அமைச்சர் வழங்கினார்.

213 மனுக்கள்

கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் வேண்டி, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என 213 மனுக்கள் பெறப்பட்டது. 

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவித்திட அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story