குடற்புழு நீக்க மாத்திரை தின்ற 9 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம்

முசிறி, மார்ச்.15-
திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. தண்டலை புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் நரேந்தர் தலைமையில் சுகாதாரத்துறையினர் இந்த மாத்திரைகளை வழங்கினர்.
இந்த நிலையில் மாத்திரை தின்ற மாணவிகள் ரூபனா, வினோதினி, கிருபா, பிருந்தா, பிரேமா, கவுசிகா, லலிதா, சாருமதி, புஷ்பவள்ளி ஆகிய 9 பேருக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டு மயங்கினர். இதைகண்ட சுகாதாரத்துறையினர் அவர்களை உடனடியாக முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அதன்பின் அவர்கள் குணம் அடைந்தனர்.
இதுகுறித்து, மருத்துவ அலுவலர் நரேந்தர் கூறும்போது, ஒரு சில மாணவிகள் மாத்திரை தின்றாலே வாந்தி எடுப்பார்கள். பொதுவாக குடற்புழு நீக்க மாத்திரையை சுவைத்து சாப்பிட வேண்டும். சில மாணவிகள் உடனே மாத்திரைகள் விழுங்கி விடுவதால் தான் வாந்தி வருகிறது என்றார்.
மாத்திரை வழங்குவதற்கு முன் மருத்துவர்களோ, பள்ளி நிர்வாகமோ பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இது போன்ற மாத்திரை வழங்கும்போது முன்னரே பெற்றோர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Tags :
Next Story