குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் 176 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
சமூக நலத்துறையின் சார்பில் ரூ.7 ஆயிரம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரமும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வேளாண் பண்ணைக் கருவிகளின் தொகுப்பினையும் கலெக்டர் வழங்கினார். ஒவ்வொரு தொகுப்பிலும் கடப்பாறை, மண்வெட்டி, களைகொத்தி, மண்சட்டி, கதிர் அறுப்பான போன்ற வேளாண் கருவிகள் உள்ளது. பொது பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும், பட்டியல் பிரிவு இனத்தவர்களுக்கு 90 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், துணை கலெக்டர் கந்தசாமி, வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story